Wednesday 26 November 2014

MASTERCAM-தமிழில்...-1

ற்ற CAD/CAM மென்பொருளில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் பலர் சொல்லக் கேட்டும், என் 15 வருட CAD/CAM அனுபவம் மூலமாகவும் இயந்திரவியல் CNC துறையில் 2D MACHINING-ல் எல்லோருடைய முதல் சாய்ஸ் MASTERCAM தான் என்கிற முக்கிய தகவலுடன் இந்த MASTERCAM-தமிழில் என்கிற பாகத்தை ஆரம்பிக்கிறேன்.

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட CAD/CAM மென்பொருள் MASTERCAM என்று  சொல்லப்படுகிறது.  இது 1983-ல் அமெரிக்காவில் உள்ள CNC Software,Inc என்ற PC-based CAD/CAM நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டது.

CNC Software,Inc
முதலில் 2D (Two Dimensional) CAM-ல் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர்கள் பிறகு 3D (3 Dimensional) CAM-க்காக மேம்படுத்தி, உலக அளவில் CNC துறையில் 2D &3D MACHINING-ல் தவிர்க்க முடியாத, தனித்துவமான ஒரு மென்பொருளாக இந்த MASTERCAM -யை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்

இன்று Mold making, Automotive, Aerospace, and Consumer industries-யைப் பொறுத்தவரையில், உலக அளவில் முறையான MASTERCAM லைசென்ஸ் பெற்று இயங்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை சுமார் 1,70,000 என்று சொல்கிறார்கள் .
industrieபொறுத்தவரையில், உலக அளவில் முறையான லைசென்ஸ் பெற்று இயங்கும் தொழிற்சாலைகள் சுமார் 1,70,000 என்று சொல்லப்படுகிறது.
mold making, automotive, aerospace, and consumer industries - See more at: http://www.mastercam.com/en-us/CompanyInfo#sthash.yJCxmY9V.dpuf
mold making, automotive, aerospace, and consumer industries - See more at: http://www.mastercam.com/en-us/CompanyInfo#sthash.yJCxmY9V.dpuf


முதலில் CAD/CAM என்றால் என்ன..?  இதில் MASTERCAM -ன் பயன்பாடு என்ன..?

Computer Aided Design என்பதின் சுருக்கம் தான் CAD. தொழிற்சாலைகளில் இயந்திர பாகங்களை வடிவமைப் பவர் அதை உற்பத்தி செய்பவர்களுக்கு விளக்குவதற்காக வரைபடங்களை ஒரு மீடியமாக பயன்படுத்தி வந்தனர். முதலில் கையினால் வரையப்பட்ட இவ்வகைப் படங்கள் பின்பு கணினி கண்டுபிடித்தப் பிறகு பல்வேறு மென்பொருளைப் பயன்படுத்தி தெளிவாகவும் நேர்த்தியாகவும் வரைய ஆரம்பித்தனர். அதில் முதன்மையானது AUTOCAD என்கிற மென்பொருள். Engineering Drawing எனப்படும் இவ்வகைப் படங்கள் கணினி மூலம் வரைவதனால் தவறுகள் தடுக்கப்படுவது மட்டுமில்லாமல் வரையும் நேரமும் குறைகிறது.
two-dimensional (2D) CAM

two-dimensional (2D) CAMComputer Aided Design என்பதின் சுருக்கம் தான் CAD. தொழிற்சாலைகளில் இயந்திர பாகங்களை வடிவமைப் பவர் அதை உற்பத்தி செய்பவர்களுக்கு விளக்குவதற்காக வரைபடங்களை ஒரு மீடியமாக பயன்படுத்தி வந்தனர். முதலில் கையினால் வரையப்பட்ட இவ்வகைப் படங்கள் பின்பு கணினி கண்டுபிடித்தப் பிறகு பல்வேறு மென்பொருளைப் பயன்படுத்தி தெளிவாகவும் நேர்த்தியாகவும் வரைய ஆரம்பித்தனர். அதில் முதன்மையானது AUTOCAD என்கிற மென்பொருள். Engineering Drawing எனப்படும் இவ்வகைப் படங்கள் கணினி மூலம் வரைவதனால் தவறுகள் தடுக்கப்படுவது மட்டுமில்லாமல் வரையும் நேரமும் குறைகிறது.
Computer-Aided Manufacturing என்பதின் சுருக்கம் CAM . கணினி கண்டுபிடிக்கும் வரை CNC என்கிற தொழில் நுட்பம் கிடையாது. ஏனெனில் CNC  என்பதே Computer Numerical Control தானே. அதற்கு முன்பு வரை Conventional Machines எனப்படும் கைகளால் இயக்கும் இயந்திரத்தையே பயன்படுத்தி வந்தனர். Aerospace, Mold making போன்ற துறைகள் வந்தவுடன் உற்பத்திப் பொருட்கள் மிகுந்த தரமானதாகவும் அதிக எண்ணிக்கையிலும் தேவைப்பட்டதால் CNC என்கிற தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. 

CNC மெசினில் கூட முதலில் புரோகிராம் கைகளால்தான் எழுதப்பட்டது. ஆனால் கடினமான, சிக்கலான வடிவம் கொண்ட இயந்திர பாகங்களுக்கு புரோகிராம் எழுதுவது மிகுந்த சவாலான விசயமாக இருந்தது. அதிக நேரம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தவறுகள் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம் இருந்ததால் கணினி மூலம் புரோகிராம் எழுதும் முறை கொண்டுவந்தார்கள். எந்த மாதிரியான பாகம் வேண்டுமோ அதை அப்படியே கணினியில் வடிவமைத்து , அதிலேயே ' TOOLPATH SIMULATION ' எடுத்து என்ன மாதிரி அவுட்புட் வரவேண்டுமோ அதை கணினியிலேயோ உறுதி செய்யும் அளவுக்கு அடுத்தடு த்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வந்தன. இதன் மூலம் புரோகிராம் பிழையில்லாமலும் விரைவாகவும் தருவிக்கப்பட்டது. இவ்வகை மென்பொருள் CAM SOFTWARE என்று அழைப்படுகிறது.

பொதுவாக CAD என்று  AUTOCAD போன்ற வடிவமைப்பு மட்டும் செய்கின்ற மென்பொருளை அழைக்கிறார்கள். MASTERCAM, UNIGRAPHICS ,GIBS CAM போன்ற மென்பொருள்கள் வடிவமைப்பு செய்வதுடன் TOOLPATH SIMULATION எடுத்து புரோக்ராமும் செய்வதால் இவ்வகை மென்பொருளை CAD/CAM SOFTWARE என்று அழைக்கிறார்கள்.


அடுத்த பாகத்தில் CNC MACHINE என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
two-dimensional (2D) CAM



1 comment: