MASTERCAM என்கிற தொழில்நுட்பத்தினுள் நுழையும் முன்பு 2D TOOLPATH - 3D TOOLPATH என்றால் என்ன.. இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன..என்பதைப் பார்க்கலாம்.இதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் இருபரிமாணம், முப்பரிமாணம் என்று அர்த்தம் வரும். கிட்டத்தட்ட அதே அர்த்தம்தான் இங்கேயும்.
இங்கே TOOL செல்லும் பாதையை வைத்துதான் அது 2D அல்லது 3D TOOLPATH என்பதைத் தீர்மானிக்க முடியும். அதற்கு முன் TOOL என்றால் என்ன.?
ஒரு குறிப்பிட்ட செயலை செய்யப் பயன்படும் கருவி, சாதனம் அல்லது application எல்லாமே TOOL தான். அந்தந்த துறையைப் பொறுத்து இதன் அர்த்தங்கள் மாறுபடும். மருத்துவத்துறையில் ஆபரேசன் செய்யப் பயன்படும் கருவிகளை க்ளினிகல் டூல்ஸ் என்பார்கள். ஐடி துறையில் டெஸ்டிங் டூல் என்பார்கள். இயந்திர வியல் துறையில் பொதுவாக ஸ்க்ரு டிரைவர், ஸ்பானர், கட்டிங் பிளேயர் உள்ளிட்டவைகளை டூல்ஸ் என்பார்கள். CNC துறையைப் பொருத்தவரையில் Endmill, Drill, Inserts, etc இவைகள்தான் TOOLS .
TOOL செல்லும் பாதையை தீர்மானிப்பது யார்..? எதன் அடிப்படையில் தீர்மானிகிறார்கள்..?
நாம் என்ன மாதிரியான வடிவத்தில் உருவாக்க நினைக்கிறோமோ அதைப் பொருத்துதான் 2D அல்லது 3D toolpath -ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். CNC துறையில் பணிபுரிபவர்களுக்கு 2D மற்றும் 3D TOOLPATH க்கு இடையேயான வித்தியாசம் நன்றாகத் தெரிந்திருக்கும்.
உதாரணமாக, ஒரு கன செவ்வக வடிவ இயந்திர பாகத்தை உருவாக்குகிறோம் என வைத்துக்கொள்வோம். அதன் பக்கவாட்டில் MILLING செய்யும்போது, TOOL -ன் நகர்வு இப்படி இருக்கும்.

1. HORIZONTAL MOVEMNT- X AXIS
2. VERTICAL MOVEMENT- Y AXIS
3.RADIAL MOVEMENT - X&Y AXIS
அதாவது X,Y,Z அச்சுகளில் தனித்தனியாகவோ அல்லது XY அச்சு ஒருங்கிணைந்தோ TOOL -ன் நகர்வு இருந்தால் அது 2D toolpath. மாறாக, XZ அல்லது YZ அல்லது XYZ என்கிற ஒருங்கிணைப்பில் TOOL -ன் நகர்வு இருந்தால் அது 3D toolpath.
இன்னும் தெளிவாக விளக்குகிறேன். கீழே இருக்கும் இரண்டு படங்களையும் உற்று நோக்குங்கள்.
இப்போது ஒரு பேனா, பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள்.
படம் 'A' யில உள்ள மாதிரி 1--->2--->3-->4-->1 என சதுர வடிவில
ஒரு கட்டம் வரையுங்கள். தற்போது உங்க பேனா சென்ற பாதை...இடமிருந்து
வலம்(1-2), கீழிருந்து மேல்,வலமிருந்து இடம், கடைசியாக மேலிருந்து கீழ்.
அடுத்ததாக படம் 'B'
ஒரு உருண்டையான பந்து
(எல்லா பந்தும் உருண்டையாகத்தான் இருக்கும்) எடுத்துக்குங்க. முன்பு பேப்பர்ல வரைந்தது போல இதிலேயும் ஒரு கட்டம் வரையவும். இப்போது உங்க பேனா போற பாதை எப்படி இருக்கு?. முன்பு சொன்ன பாதையை விட
கூடுதலாக ஒரு பாதை செங்குத்தாக கீழேயும் மேலேயும் போகுது இல்லையா?.. அதுதான் 3D TOOLPATH. படம் A யில் உள்ளது 2D TOOLPATH.
படம் 'A' யில் இடமிருந்து வலம்,வலமிருந்து இடம். இது X-AXIS என சொல்வார்கள்.
மேலிருந்து கீழ்,கீழிருந்து மேல். இது Y-AXIS.
மேலிருந்து கீழ்,கீழிருந்து மேல். இது Y-AXIS.
படம் 'B' ல் செங்குத்தாக மேலும் கீழும் போகுதே....இது Z-AXIS.
X &Y திசையில் TOOL நகர்ந்தால் அது 2D TOOLPATH.
X &Y&Z திசையில் TOOL நகர்ந்தால் அது 3D TOOLPATH......அவ்வளவுதான் வித்தியாசம்.
உதாரணத்திற்கு,உங்கள் பேனாதான் TOOL- என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பேனா சென்ற பாதைதான் TOOLPATH.
ஓரளவு 2D-க்கும் 3D-க்கும் வித்தியாசம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இன்னும் தெளிவாக GIF படம் மூலமாக கீழே விளக்கியிருக்கிறேன்.
