Sunday 11 May 2014

வெற்றிப்படிகட்டு.. இயந்திரவியல் துறையினருக்கான புதிய தொடர் ..!

வணக்கம்..

இயந்திரவியல் துறையில் பணிபுரிவோருக்கு பயன்படும் வகையில் முன்பு CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா? என்கிற தலைப்பில் எனது வலைத்தளமான மனதில் உறுதி வேண்டும்-ல் ஒரு தொடர் எழுதிவந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அது தடைபட்டு விட்டது. பிறகு தனி வலைத்தளம் ஒன்றைத்தொடங்கி அதில் எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் வேலைப்பழுவினால் அதையும் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.

இது போல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கால நேரத்திற்காக காத்திருக்காமல் இருக்கின்ற நேரத்தை நமக்குத் தகுந்தாற்போல் மாற்றியமைத்துக்கொள்வதே சிறந்த வழி என்பதை உணர்ந்தபடியால் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

இந்த வலைத்தளம் இயந்திரவியல் துறையில் நுழைவோருக்கு ஒரு சிறிய வழிகாட்டியாகவாவது இருக்கும் என நம்புகிறேன். அப்படி இல்லாத பட்சத்தில் எனக்கான ஒரு Documentation-ஆக இருந்துவிட்டு போகட்டுமே...! இதில் Mastercam மட்டுமில்லாமல் Solidworks, Solidcam போன்றவற்றையும் தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

நான் அறிந்த நுணுக்கங்களை இதில் பகிர்கிறேன். என்னைவிட அதிகம் அறிந்தவர்கள் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். அல்லது அதைவிட சிறந்த நுணுக்கமான விசயங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும். ஏனெனில் இது நான் யார் என்பதைக் காட்டிக்கொள்வதற்கான தளமல்ல. நான் கற்ற நுணுக்கங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற பரந்த சமூக நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தளம். 

ஆகவே மக்களே....

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல். "

என்ற மகாகவியின் வரிகளுக்கேற்ப....( பில்டப் பண்ணினது போதும்யா.. மேட்டருக்கு வாரும்யா என நீங்க திட்டுறது கேக்குது  பாஸ்..)

சரி.. இனிதே ஆரம்பிக்கிறது இந்தத் தொழில்நுட்பத்தளம்...